/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சுருளி அருவியில் வன உயிரின மியூசியம் அமைக்கும் பணி சுணக்கம்
/
சுருளி அருவியில் வன உயிரின மியூசியம் அமைக்கும் பணி சுணக்கம்
சுருளி அருவியில் வன உயிரின மியூசியம் அமைக்கும் பணி சுணக்கம்
சுருளி அருவியில் வன உயிரின மியூசியம் அமைக்கும் பணி சுணக்கம்
ADDED : செப் 28, 2025 03:31 AM
கம்பம்: சுருளி அருவியில் வன உயிரினங்களின் ராட்சத பொம்மைகள் அடங்கிய மியூசியம் ஏற்படுத்த கடந்தாண்டு வனத்துறை மேற்கொண்ட நடவடிக்கை எவ்வித முன்னேற்றம் இன்றி தேக்கநிலையில் உள்ளது.
சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பில் வனப்பகுதிகளும், வனங்களில் வாழும் வன உயிரினங்களும் முக்கிய பங்காற்றுகிறது. ஆனால் வனங்கள் மற்றும் வன உயிரினங்களின் முக்கியத்துவம் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு இல்லை. மேலும் வனமும் வன உயிரினங்களும் ஒன்றொடொன்று தொடர்புடையது. எனவே வனமும், அதில் வாழும் உயிரினங்களும் இந்த பூமியின் சுற்றுச் சூழல் சமநிலையில் இருக்க உதவுகிறது.
எனவே சுருளி அருவியில் வனம் மற்றும் அதில் வாழும் வன உயிரினங்களின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் மியூசியம் அமைக்க மேகமலை புலிகள் காப்பக அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அதன்படி கடந்தாண்டு யானை , காட்டு மாடு ஆகியவற்றின் ஆளுயர பொம்மைகள் அருவி பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் அந்த பொம்மைகள் எங்கு போனது என்ன ஆனது என்றே தெரியவில்லை. மியூசியம் அமைக்கும் பணியும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ரேஞ்சர் பிச்சை மணி கூறுகையில், சுருளி அருவியில் பொதுமக்கள் ரசிக்கவும், அதே சமயம் வன உயிரினங்கள் இந்த பிரபஞ்சத்திற்கு எவ்வளவு அவசியம் என்பதை தெரிவிக்கும் வகையில் மியூசியம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம்.
இன்னமும் ஒரு மாதத்தில் பொம்மைகள் வந்து விடும். மியூசியம் அமைக்கும் இடத்தில் ஷட்டர் அமைத்தல், பெயிண்டிங் பணிகள் நடந்து வருகிறது. முதற்கட்டமாக யானை, காட்டு மாடு பொம்மைகள் வந்துள்ளன. விரையில் பிற உயிரினங்களின் பொம்மைகளும் வர உள்ளது. இதற்கான திறப்பு விழா விரைவில் நடக்கும் என்றார்.

