/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஈர நிலம் புகைப்பட போட்டி: வெற்றி பெற்றோர் விபரம் அறிவிக்காமல் இழுத்தடிப்பு விரக்தியில் போட்டியாளர்கள்

ADDED : மார் 16, 2024 06:31 AM
தேனி, : மாவட்ட வனத்துறை சார்பில் கடந்த 2022ல் நடந்தப்பட்ட ஈரநிலம் புகைப்பட போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விபரம் அறிவிக்காததால் பங்கேற்ற புகைப்பட கலைஞர்கள் விரக்தியில் உள்ளனர்.
தேனி கலெக்டராக இருந்த முரளீதரன் அறிவிப்பில் 2022 பிப்., 2ல் ஈர நிலங்கள் பாதுகாப்பு,முக்கியத்துவம் குறித்து விழா நடக்க உள்ளது. இதில் 2022 பிப்., 20 முதல் 26 வரை இணையத்தளம் மூலம் நடக்க உள்ள ஈரநிலம் தொடர்பான மாவட்ட அளவிலான புகைப்பட போட்டியில் பங்கேற்கலாம்.
பங்கேற்க விரும்பு பள்ளி, கல்லுாரி மாணவர்கள், ஈர நில நண்பர்கள் மற்றும் தன்னார்வலர்கள், புகைப்பட ஆர்வலர்கள் புகைப்பட பதிவுகளை மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் போட்டியில் முதல் மூன்று இடங்கள் பெறுவோரை கலெக்டர் தலைமையிலான தணிக்கைக்குழு தேர்வு செய்யும்.
பரிசளிப்பு விழா பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தனர். இதனை ஏற்று பலர் இப் போட்டியில் பங்கேற்றனர்.
ஆனால் போட்டி முடிவு தெரியாமல் இதுவரை தவித்து வருகின்றனர். மாவட்ட வனத்துறை, கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து, வெற்றி பெற்றவர்களை விபரம் அறிவிக்க கோரிக்கை எழுந்துள்ளது.