/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குடும்பக்கட்டுப்பாடு சிறப்பு முகாம்கள் நடத்த வலியுறுத்தல்! துணை இயக்குனர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ADDED : ஏப் 24, 2024 12:20 AM
கொரோனா தொற்றுக்கு பின் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. குறிப்பாக தேனி மாவட்டத்தில் 3 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் 200 பேர்களுக்கு மேல் உள்ளனர் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அத்துடன் 20 வயதுக்கு கீழ் திருமணம் முடித்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
எனவே கடந்த ஓராண்டாக கலெக்டர் ஷஜீவனா உத்தரவில் பெண்களுக்கு லேப்ரோஸ்கோபி மூலம் குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சையும், ஆண்களுக்கு 'வாசக்டமி' அறுவை சிகிச்சையும் தீவிரமாக துறை சார்பில் மேற்கொள்ளப்படடன. சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. கலெக்டர் தங்க நாணயம் ஊக்க பரிசாக வழங்கினார்.
குடும்ப நலத்துறையின் தீவிர நடவடிக்கையை பாராட்டி டாடா மெமோரியல் பவுண்டேசன் கடந்த டிச.18 ல் விருதும், ரூ.2 லட்சத்திற்கான காசோலையும் வழங்கி கவுரவித்தது. விருது பெற்ற பின் குடும்ப நலத்துறை சிறப்பு முகாம்கள் நடத்துவதில் சுணக்கம் காட்டி வருகிறது.
'வரும் பிப்ரவரியில் இருந்து தொடர்ந்து சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.' என, குடும்ப நலத்துறை அறிவித்திருந்தது. ஆனால் என்ன காரணத்தினாலோ சிறப்பு முகாம்கள் நடத்தாமல் உள்ளனர்.
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகள் வழக்கம் போல நடந்து வந்தாலும்,
சிறப்பு முகாம்கள் நடத்தும் போது தான் அதிகமாக அறுவை சிகிச்சைகள் செய்ய முடியும். இதனால் குடும்பநலத்துறை துணை இயக்குனர் முகாம்கள் நடத்த நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளன.