/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பிரியாணி கடையில் தகராறு கொலை வழக்கில் இருவர் கைது
/
பிரியாணி கடையில் தகராறு கொலை வழக்கில் இருவர் கைது
பிரியாணி கடையில் தகராறு கொலை வழக்கில் இருவர் கைது
பிரியாணி கடையில் தகராறு கொலை வழக்கில் இருவர் கைது
ADDED : டிச 23, 2025 04:22 AM

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் பிரியாணி கடையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் சத்தியமூர்த்தியை 26, கத்தியால் குத்தி கொலை செய்த கம்பத்தைச் சேர்ந்த முகிலன் 25, சிபி சூர்யாவை 24, போலீசார் கைது செய்தனர்.
கம்பம் மெயின்ரோடு ஐ.ஓ.பி. வங்கிக்கு எதிரே உள்ள பிரியாணி கடையில் நேற்று முன்தினம் மாலை ராயப்பன்பட்டி, வைரவன் கோயில் தெரு முருகன் மகன் சத்யமூர்த்தி, நண்பர்கள் ஆதேஷ் 21, கபில்தேவ் 41 ஆகியோருடன் சாப்பிட்டார். அங்கு சாப்பிட கம்பம் சுப்ரமணிய சுவாமி கோயில் தெரு சிபி சூர்யா, முகிலன் வந்துள்ளனர். உள்ளே வந்த போது ஏற்கனவே சாப்பிட்டு கொண்டிருந்த சத்யமூர்த்தியின் காலை இடறியுள்ளனர். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
சாப்பிட்டு முடித்த சத்யமூர்த்தி கடையின் முன்பு நின்றிருந்த போது, முகிலனும், சிபி சூர்யாவும் அருகில் உள்ள செருப்பு தைக்கும் கடையில் இருந்த கத்தியை எடுத்து வந்து, சத்யமூர்த்தியின் மார்பில் குத்தியதில் சரிந்து விழுந்தார். தடுக்க வந்த ஆதேஷுக்கும் காயம் ஏற்பட்டது.
கம்பம் அரசு மருத்துவமனைக்கு சத்யமூர்த்தியை அழைத்து சென்றபோது அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர். இதையடுத்து முகிலன், சிபிசூர்யாவை இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையிலான போலீசார் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன என போலீசார் தெரிவித்தனர்.

