ADDED : அக் 25, 2025 04:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடமலைக்குண்டு:  மயிலாடும்பாறை அருகே கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலில் எஸ்.ஐ.,ராமசாமி தலைமையிலான போலீசார் குமணன்தொழு, பொன்னம்படுகை பகுதிகளில் ரோந்து சென்றனர்.
பொன்னம்படுகை ரோட்டில் 15 கிராம் கஞ்சா  விற்பனைக்கு வைத்திருந்த  குமணன்தொழுவைச் சேர்ந்த ஆனந்தன் 40,  இதே பகுதியை சேர்ந்த  20கிராம் கஞ்சா வைத்திருந்த குபேந்திரன் 35,  ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

