/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
த.வெ.க., கட்சியினரால் போக்குவரத்து பாதிப்பு
/
த.வெ.க., கட்சியினரால் போக்குவரத்து பாதிப்பு
ADDED : பிப் 19, 2024 06:06 AM
தேனி : தேனி நகர் பகுதியில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தினர் போலீசார் அனுமதி இன்றி டூவீலர்களில் ஊர்வலம் சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தேனி பெரியகுளம் ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் இக்கட்சியில் பிற கட்சியினர் இணையும் விழா நடந்தது. நிகழ்ச்சி துவங்கும் முன் கட்சியை சேர்ந்த இளைஞர்கள் பலர் ஒரு டூவீலருக்கு 3 பேர் என (ஹெல்மெட் அணியாமல்), காரில் அதிக ஹாரன் சத்தத்துடனும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியவாறு மதுரை ரோடு, பங்களா மேடு, நேருசிலை, பெரியகுளம் ரோடு வழியாக மண்டபத்திற்கு வந்தனர். பெரியகுளம் ரோட்டில் நீண்ட துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போலீசார் போதிய அளவில் நகர் பகுதியில் இல்லாதாதல் மக்கள் புலம்பியவாறு சென்றனர்.

