/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கேரளாவில் வர்த்தகர்கள் கடையடைப்பு மூணாறில் சுற்றுலா பயணிகள் அவதி
/
கேரளாவில் வர்த்தகர்கள் கடையடைப்பு மூணாறில் சுற்றுலா பயணிகள் அவதி
கேரளாவில் வர்த்தகர்கள் கடையடைப்பு மூணாறில் சுற்றுலா பயணிகள் அவதி
கேரளாவில் வர்த்தகர்கள் கடையடைப்பு மூணாறில் சுற்றுலா பயணிகள் அவதி
ADDED : பிப் 14, 2024 04:52 AM

மூணாறு, : கேரளாவில் வியாபாரி, விவசாயி ஏகோபன சமிதி எனும் வர்த்தக சங்கம் சார்பில் நேற்று மாநிலம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன.
கேரளாவில் பிளாஸ்டிக் தடை சட்டம், லைசென்ஸ் கட்டணம், மின்கட்டணம் உயர்வு, ஜிஎஸ்டி பெயரில் துன்புறுத்தல், குப்பைகளை கையாள கடும் கட்டுப்பாடு என பல்வேறு நிபந்தனைகளை அரசு கட்டாயமாக்கியதால் வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு தீர்வு காணக்கோரி கேரளா வியாபாரி, விவசாயி ஏகோபன சமிதி எனும் வர்த்தக சங்கத்தின் மாநில தலைவர் ராஜூஅப்சரா தலைமையில் ஜன. 29ல் காசர்கோட்டில் துவங்கிய சுற்றுப் பயணம் நேற்று (பிப்.13) திருவனந்தபுரத்தில் நிறைவு பெற்று அங்கு பிரமாண்டமாக பொதுக் கூட்டம் நடந்தது. அதில் வர்த்தகர்கள் பங்கேற்பதற்கு வசதியாக நேற்று மாநிலம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன.
மூணாறில் வர்த்தக சங்கம் சார்பில் கடைகள் அடைக்கப்பட்டன. அதற்கு ஓட்டல், ரெஸ்டாரண்ட் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்து அவற்றை மூடினர். அதே சமயம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பிலான வியாபாரி, விவசாயி சமிதி எனும் வர்த்தக சங்கத்தினர் கடைகளை திறந்தனர்.
மூணாறு பகுதியில் ஹைடல் சுற்றுலா தொழிலாளர்கள் நடத்தும் காலவரையற்ற போராட்டத்தால் அத்துறை சார்பில் சுற்றுலா மையங்கள் கடந்த மூன்று நாட்களாக மூடப்பட்ட நிலையில் வர்த்தகர்கள் கடைகளை அடைத்ததால் சுற்றுலா பயணிகள் திண்டாடினர்.

