/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இன்று ஆடி அமாவாசை: பாதுகாப்பு பணியில் 750 போலீசார் நியமனம்
/
இன்று ஆடி அமாவாசை: பாதுகாப்பு பணியில் 750 போலீசார் நியமனம்
இன்று ஆடி அமாவாசை: பாதுகாப்பு பணியில் 750 போலீசார் நியமனம்
இன்று ஆடி அமாவாசை: பாதுகாப்பு பணியில் 750 போலீசார் நியமனம்
ADDED : ஜூலை 24, 2025 06:19 AM
தேனி : இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு பொது மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்க ஏதுவாக ஐந்த கோயில்களில் பாதுகாப்புப் பணியில் 750 போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆண்டிபட்டி மாவூற்று வேலப்பர் கோயில், வீரபாண்டி கவுமாரியம்மன், கண்ணீஸ்வரமுடையார் கோயில், போடி கைலாய மேலசொக்கநாதர் கோயில், அல்லிநகரம் சுயம்பு வீரப்ப அய்யனார் மலைக்கோயில், கம்பம் சுருளி அருவி ஆதி அண்ணாமலையார், பூதநாராயணன், சுருளி வேலப்பர்கோயில்களில் மயிலாடும்பாறை மாளிகைப்பாறை கருப்பசாமி கோயில்கள் மற்றும் ஆற்றோரம் உள்ள கோயில்களில் பொது மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்க அதிகளவில் குவிவார்கள். இதற்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இதனால் தேனி எஸ்.பி., சினேஹா ப்ரியா உத்தரவில் 5 கோயில்களில் சப்டிவிஷன் டி.எஸ்.பி.,க்கள் மேற்பார்வையில் 750 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். இதில் மாவூற்று வேலப்பர் கோயில், மாளிகைப்பாறை கருப்பணசாமி கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்.பி., ஆய்வு செய்தார். ஹிந்து அறநிலையத் துறையின் சார்பில், பக்தர்களின் வசதிக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

