sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சின்னமனுார் சிவகாமியம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் கோயில் மஹா கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்பு

/

சின்னமனுார் சிவகாமியம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் கோயில் மஹா கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்பு

சின்னமனுார் சிவகாமியம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் கோயில் மஹா கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்பு

சின்னமனுார் சிவகாமியம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் கோயில் மஹா கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்பு


ADDED : பிப் 11, 2025 05:28 AM

Google News

ADDED : பிப் 11, 2025 05:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னமனூர்: சின்னமனூர் சிவகாமியம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் கோயில் மஹா கும்பாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டு 'ஹர ஹர மகா தேவா' என கோஷமிட்டு வழிபட்டனர்.

சின்னமனூர் சிவகாமியம்மன் பூலாநந்தீஸ்வரர் கோயில் திருப்பணி, கும்பாபிஷேகம் கடந்த 2022 முதல் ஊர் முக்கிய பிரமுகர்கள் ஒருங்கிணைந்து திருப்பணி வேலைகளை செய்தனர்.

கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்த திருப்பணி வேலைகள் சமீபத்தில் நிறைவடைந்தது. கடந்த டிச.6ல் முகூர்த்த கால் ஊன்றப்பட்டது. பிப். 6 மாலை முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, புன்யா ஹா வாசகம், ஆறாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. 19 யாகசாலைகளில் காலை 9:15 மணிக்கு பூஜைகள் நிறைவு பெற்றது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து 7 கடங்களில் புனித நீர், கோபுரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.

ராஜகோபுரத்தில் காலை 9:28 மணிக்கு திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயில் இரண்டாம் ஸ்தானீகம் ராஜா பட்டர் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் கலசங்களில் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கோயிலில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் 'ஹர ஹர மகாதேவா' என முழக்கமிட்டனர். தொடர்ந்து புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. மாலை திருக்கல்யாணம், வீதி உலா நடைபெற்றது.

கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ., நகராட்சி தலைவர் அய்யம்மாள், பஞ்சாப் குமரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

திருப்பணி மற்றும் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை தலைமை ஒருங்கிணைப்பாளர் துர்காவஜ்ரவேல், ஆசிரியர் விரியன் சாமி, ஜி.ஆர்.டி. நிர்வாக அறங்காவலர் பத்மனாபன், குமரேசன், முத்துக்குமரன், மனோகரன், மலைச்சாமி, சிவராமன், பாரி, ஆத்திக்குமார், சங்கர நாராயணன். கார்த்திகேயன், பாலமுருகன் மற்றும் செயல் அலுவலர் நதியா ஆகியோர் செய்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நகரின் பல இடங்களில் அன்னதானம் நடைபெற்றது.

வாகன நிறுத்துமிடம், குடிநீர், சுகாதார பணிகளை நகராட்சி பணியாளர்கள் கடந்த ஒரு வாரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

போலீஸ் திணறல்: 17 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் நடைபெற்றதால், ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரள்வார்கள் என தெரிந்து, போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை விரிவாக செய்திருந்தனர்.

போடி, உத்தம பாளையம் டி.எஸ்.பி.க்கள் அனில், செங்கோட்டு வேலன் தலைமையில் நூற்றுக்கணக்கில் போலீசார் நியமிக்கப்பட்டனர். இதற்கென பைபாஸ் ரோட்டில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

இருந்த போதும், கும்பாபிஷேகம் முடிந்து பக்தர்கள் திரும்பும் போது, கோயில் வளாகத்திலும், மார்க்கையன்கோட்டை ரோட்டிலும் கடுமையான நெருக்கடி ஏற்பட்டது.

ஒரு கி.மீ. தூரத்திற்கு மக்கள் கூட்டம் இருந்தது. கூட்டத்தை வெளியேற்ற முடியாமல் போலீசார் திணற வேண்டிய நிலை எழுந்தது.

கும்பாபிஷேகத்தில் பங்கேற்றோர் விபரம்


மஹா கும்பாபிஷேகத்தில் தி.மு.க. முன்னாள் நகர் செயலாளர் மயில்வாகனன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் ஜெயபாண்டியன், மாநில வர்த்தத சங்க பேரமைப்பின் துணை தலைவர் பெருமாள், ராமா ஜுவல்லர்ஸ் வெங்கடேஷ் குப்தா, அட்வகேட் சிங்காரவேலன், ராம விலாஸ் மணிகண்டன், விவசாயிகள் சங்க தலைவர் ராஜா, விகாசா பப்ளிக் பள்ளி தாளாளர் இந்திரா, கிருஷ்ணய்யர் மேல்நிலைப் பள்ளி செயலர் மாரிமுத்து, தலைவர் சிவமணி, திருப்பதி எக்ஸ்புளோசிவ்பிளாசிவ்ஸ் ஸ்ரீதர், லட்சுமி மெடிக்கல்ஸ் பாலசுப்ரமணி, ஜெயசக்தி ஸ்டோர் சரவண பிரபு, பா.ஜ. முன்னாள் நகர் தலைவர் லோகேந்திரராசன், பா.ஜ. நகர் தலைவர் சிங்கம், தி.மு.க., பொதுக் குழு உறுப்பினர் ஹக்கீம், ஹிந்து முன்னணி பாண்டி, நல்லி மெட்ரிக் பள்ளி தாளாளர் ராமர், தாய் மெட்ரிக் பள்ளி திருநாவுக்கரசு, ரியல் எஸ்டேட் சின்னையா, சூர்யா ஏஜென்சி சுருளிவேல்.

கூட்டுறவு சங்க செயலாளர் ரவிச்சந்திரன், லட்சுமி நகை கடை நடராசன், புரபசனல் கூரியர் ராமசுப்ரமணி, சரண்யா ஜூவல்லர் பழனிராஜா, வசந்தா ஜீவல்லர் சந்திரசேகர், பாரம்பரி உணவு சிவகுருநாதன், ஆண்டவர் பிளைவுட்ஸ் ஆண்டவர், இன்ஜினியர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us