/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
துார்வாராத சாக்கடையால் வீட்டிற்குள் வரும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு தேனி நகராட்சி 2வது வார்டு மக்கள் அவதி
/
துார்வாராத சாக்கடையால் வீட்டிற்குள் வரும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு தேனி நகராட்சி 2வது வார்டு மக்கள் அவதி
துார்வாராத சாக்கடையால் வீட்டிற்குள் வரும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு தேனி நகராட்சி 2வது வார்டு மக்கள் அவதி
துார்வாராத சாக்கடையால் வீட்டிற்குள் வரும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு தேனி நகராட்சி 2வது வார்டு மக்கள் அவதி
ADDED : பிப் 14, 2024 04:58 AM

தேனி : தேனி அல்லிநகரம் நகராட்சியில் 2 வார்டு பகுதியில் கழிவு நீர் ஓடைகள் முறையாக துார்வாரப்படாததால் மழைகாலத்தில் கழிவு நீர் வீட்டிற்குள் புகுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாக மருத்துவர் தெரு குடியிருப்போர் குற்றம் சாட்டு கின்றனர்.
தேனி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் 2வது வார்டில் ஒண்டிவீரன் நகர், பாலன்நகர், நேருஜி ரோடு, வெள்ளைச்சாமி தெரு, பெருமாள்தெரு, தட்டையன்தெரு, ராஜாஜிதெரு, மருத்துவர் தெரு, கிருஷ்ணசாமி தெரு, கோமாளிதெரு, முத்தால் தெரு, சின்னப்பன்தெரு, செல்லாண்டி தெரு, ராமன்தெரு, தெலுங்கு பஜார் தெரு உள்ளிட்ட 22 தெருக்கள் உள்ளன. மருத்துவர் தெருவில் 20க்கும் மேற்பட்ட வீடுகளில் நுாற்றக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். குடியிருப்போர் குரல் பகுதிக்காக இப்பகுதி குடியிருப்போர் ஈஸ்வரி, முனியம்மாள், செல்வி, தமிழ்செல்வி ஆகியோர் கூறுகையில், மருத்துவர் தெரு பள்ளத்தில் அமைந்துள்ளது. இதனால் மேடான பகுதிகளில் மழை பெய்யும் போது மழை நீருடன் கழிவு நீர் எங்கள் பகுதியில் உட்புகுகிறது. இதற்காக கழிவு நீர் சாக்கடைகளை துார்வார கவுன்சிலரிடம் கோரிக்கை விடுத்தோம். அவர் நகராட்சி அதிகாரிகள் அலைபேசி எண்களை கொடுத்தார். அந்த எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளித்தோம். அதன் பேரில் சாக்கடையை துார்வறுவதாக கூறிய அலுவலர்கள் தெரு நுழைவாயிலில் மட்டும் சாக்கடையை 5 மாதங்களுக்கு முன் தோண்டினர். அப்பணியை பாதியில் விட்டு சென்றனர்.இதனால் தற்போது சாக்கடையில் மண் மேவி உள்ளது. இது குறித்து கேட்டால் சாக்கடை மேல்பகுதிகளை சிலர் ஆக்கிரமித்து உள்ளதால் பணியை முழுமையாக மேற்கொள்ள முடியவில்லை என்கின்றனர். இத்தெருவில் உள் பகுதியில் சாக்கடை செல்ல வழி ஏதும் இல்லை இதனால் மழைகாலம் மட்டுமின்றி நகராட்சி தண்ணீர் வரும் போதெல்லம் குடியிருப்போருக்கிடையில் சண்டை தவிர்கக முடியாததாகிறது. தேங்கும் சாக்கடை கழிவு நீரில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தி ஆகின்றன. இதனால் இப்பகுதியில் உள்ளவர்கள் கொசுக்கடியால் நோய்பாதிப்புகளுக்கும் உள்ளாகுகின்றனர். இப்பகுதியில் மாதம் இருமுறை கொசுமருந்து தெளிக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தெருவில் உள்ள வீட்டு உபயோகத்திற்காக தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
அது தெரு வளைவில் உள்ளதால் டூவீலர்களில் சென்று வர சிரமாக உள்ளது. தெருவிற்கு வரும் வழியில் தெருநாய்கள் தொல்லையும் அதிகம் உள்ளது. இரவில் இவ்வழியாக வருபவர்களை துரத்து கின்றன. சிலர் கீழே விழுந்து செல்லும் நிலை உள்ளது. நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

