/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்கள் பதவி ஏற்பு டிச.27 ல் நடக்கிறது தலைவர் தேர்வு
/
உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்கள் பதவி ஏற்பு டிச.27 ல் நடக்கிறது தலைவர் தேர்வு
உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்கள் பதவி ஏற்பு டிச.27 ல் நடக்கிறது தலைவர் தேர்வு
உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்கள் பதவி ஏற்பு டிச.27 ல் நடக்கிறது தலைவர் தேர்வு
ADDED : டிச 22, 2025 06:21 AM

மூணாறு: இடுக்கி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி பெற்றவர்கள் நேற்று பதவி ஏற்றனர்.
கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக டிச.9, 11ல் நடந்தது. இடுக்கி மாவட்டத்தில் 52 ஊராட்சிகள், 8 ஒன்றியங்கள், ஒரு மாவட்ட ஊராட்சி, 2 நகராட்சிகள் ஆகியவற்றில் வெற்றி பெற்றவர்கள் நேற்று பதவி ஏற்றனர்.
இடுக்கி மாவட்ட ஊராட்சியின் தேர்தல் அதிகாரியான கலெக்டர் தினேசன் செருவாட், மூத்த உறுப்பினர் ஷீலாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதன் பிறகு ஷீலா, பிற உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
மூணாறு ஊராட்சியில் தேர்தல் அதிகாரியான தாலுகா புள்ளியியல் துறை அதிகாரி ரென்னி ஆன்டணி, 14ம் வார்டு மூத்த உறுப்பினரான செல்லதுரைக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவர் பிற உறுப்பினர்களுக்கு பதவி பிராமணம் செய்து வைத்தார்.
ஊராட்சியைச் சேர்ந்த 20 உறுப்பினர்களும் தமிழில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
2 முறை உறுதி மொழி ஊராட்சியில் 4ம் வார்டு உறுப்பினர் இந்திய கம்யூ., கட்சியை சேர்ந்த வினாயகன் பதவி பிரமாணத்தின் போது இறந்து போன கட்சி பிரமுகர்களை குறிப்பிட்டு உறுதி மொழி எடுத்தார். அச்செயல் தேர்தல் கமிஷன் உத்தரவுக்கு எதிரானது என காங்கிரஸ் உறுப்பினர்கள் உள்பட, பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்பிரச்னையில் தலையிட்ட தேர்தல் அதிகாரி வினாயகனை மீண்டும் உறுதி மொழி எடுக்குமாறு வலியுறுத்தினார். அதன்படி அவர் இரண்டாவதாக முறைப்படி உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.
அதன்பிறகு மூத்த உறுப்பினர் செல்லதுரை தலைமையில் உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது.
ஊராட்சி, ஒன்றியம், மாவட்ட ஊராட்சி ஆகியவற்றின் தலைவர் தேர்வு டிச.27ல் காலை 10:30 மணிக்கு நடக்க உள்ளது.

