/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேக்கடி திறவை வாய்க்காலில் கழிவுநீர் கலப்பு !தேனி மாவட்ட குடிநீர் ஆதாரங்கள் பாதிப்பு
/
தேக்கடி திறவை வாய்க்காலில் கழிவுநீர் கலப்பு !தேனி மாவட்ட குடிநீர் ஆதாரங்கள் பாதிப்பு
தேக்கடி திறவை வாய்க்காலில் கழிவுநீர் கலப்பு !தேனி மாவட்ட குடிநீர் ஆதாரங்கள் பாதிப்பு
தேக்கடி திறவை வாய்க்காலில் கழிவுநீர் கலப்பு !தேனி மாவட்ட குடிநீர் ஆதாரங்கள் பாதிப்பு
ADDED : டிச 24, 2025 05:59 AM

கூடலுார், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு தண்ணீர் திறக்கப்படும் தேக்கடி திறவை வாய்க்கால் அருகேகுமுளியில் உள்ள ஓட்டல்கள், லாட்ஜ்கள், குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பல ஆண்டுகளாக கலக்கிறது. இதனால்
குடிநீராக பயன்படுத்தும் தேனி மாவட்ட மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். சுத்திகரிப்பு நிலையம் அமைக்க சில ஆண்டுகளுக்கு முன் அறிவித்திருந்த போதிலும் அது கானல் நிராகியுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு குடிநீர், சாகுபடிக்காக தேக்கடி ஷட்டரில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். இந்த ஷட்டரிலிருந்து தேக்கடி நீர்த்தேக்க ஏரி வரை ஒன்றரை கி.மீ., தூர திறவை வாய்க்கால் உள்ளது. குமுளியில் உள்ள லாட்ஜுகள், ஓட்டல்கள், குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் தேக்கடி தலைமதகை ஒட்டியுள்ள திறவை வாய்க்காலில் நேரடியாக கலக்கிறது. ஆற்றில் கழிவுநீர் கலந்த தண்ணீர் செல்கிறது. பம்பிங் செய்து கூடலுார், கம்பம், காமயகவுண்டன்பட்டி, உத்தமபாளையம், சின்னமனூர், கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இது மட்டுமின்றி குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, ஆங்கூர்பாளையம்,, சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட கரையோர பகுதியில் உள்ள கிராமங்களில் நேரடியாக பம்பிங் செய்து குடிநீராக பயன்படுத்துவதால் தேனி மாவட்ட மக்கள் பலர் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
கானல் நீரான சுத்திகரிப்பு திட்டம் - பொதுமக்கள் நேரடியாக பாதிக்கும் வகையில் தேக்கடி திறவை வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தி குமுளியைச் சேர்ந்த சஜிமோன் சலீம் என்பவர் 2017ல் கேரள உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.- தேனி கலெக்டருடன் கழிவு நீர் கலக்கும் தேக்கடி திறவை வாய்க்கால் பகுதிகளை தமிழக நீர்வளத் துறையினர் ஆய்வு செய்தனர். அப்பகுதியில் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் குமுளி ஊராட்சி சார்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் கானல் நீராகிப் போயுள்ளது.

