/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
எல்லையில் ரூ.26.54 லட்சம் புகையிலை பொருள் பறிமுதல்
/
எல்லையில் ரூ.26.54 லட்சம் புகையிலை பொருள் பறிமுதல்
எல்லையில் ரூ.26.54 லட்சம் புகையிலை பொருள் பறிமுதல்
எல்லையில் ரூ.26.54 லட்சம் புகையிலை பொருள் பறிமுதல்
ADDED : பிப் 14, 2024 02:18 AM

கூடலுார்,:கர்நாடகாவிலிருந்து நீலகிரி மாவட்டம் முதுமலை வழியாக கேரளாவுக்கு, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்துவதாக தமிழக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
முதுமலை புலிகள் காப்பகம் அருகே, தமிழகம் - கர்நாடகா எல்லையான கக்கனல்லா சோதனைச் சாவடியில், போலீசார் நேற்று முன்தினம் இரவில், வாகன சோதனையை தீவிரப்படுத்தினர். அப்போது, இரவு 7:15க்கு, கர்நாடகாவிலிருந்து கேரளா சென்ற லாரியை போலீசார் சோதனையிட்டனர்.
அதில், சர்க்கரை மூட்டைகளுக்கு கீழே, 3,600 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை 240 மூட்டைகளில் மறைத்து கேரளாவுக்கு கடத்த இருந்தது தெரிந்தது.
லாரியுடன் அந்த பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, கேரளா பாலக்காடு பகுதியைச் சேர்ந்த ஓட்டுனர் ரமேஷ், 46, என்பவரை கைது செய்து, விசாரிக்கின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு 26.54 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது.

