UPDATED : அக் 28, 2026 03:58 AM
ADDED : அக் 27, 2026 07:59 PM

அ நிறம் | அளவு
தேவதானப்பட்டி: கெங்குவார்பட்டி பேரூராட்சி, செங்குளத்துப்பட்டியில் ஆயிரம் பொதுமக்கள் வசிக்கின்றனர்.
எழுவனம்பட்டி பிரிவு அருகே ரோடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் இன்று (அக்.,27) மாலை திண்டுக்கல்- குமுளி ரோட்டில் ரோடு மறியலில் ஈடுபட்டனர். தேவதானப்பட்டி போலீசார் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதால் ரோடு மறியல் கைவிட்டனர்.இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
