ADDED : ஜன 26, 2026 06:07 AM

தேனி: தேனியில் அரசுத்துறைகள் சார்பில் சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி பல்வேறு இடங்களில் நடத்தப் பட்டன.
தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்டில் இருந்து டூவீலர் ஊர்வலத்தை எஸ்.பி., சினேஹபிரியா துவக்கி வைத்தார். ஏ.டி.எஸ்.பி., கலைக்கதிரவன், டி.எஸ்.பி., முத்துக்குமார் முன்னிலை வகித்தனர். ஊர்வலம் மதுரை ரோடு, பங்களாமேடு, பெரியகுளம் ரோடு, அன்னஞ்சி விலக்கு, புது பஸ் ஸ்டாண்ட் வழியாக ஆயுத படை மைதானத்தில் நிறைவடைந்தது. இதில் ஏராளமான போலீசார் பங்கேற்றனர்.
ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஓட்டுநர்கள், பொதுமக்களுக்கு தீயணைப்பு கருவிகளை பயன்படுத்தும் விதம் பற்றி தீயணைப்புத்துறை அலுவலர் பாலமுருகன் செயல் விளக்கம் அளித்தார். நிகழ்ச்சிக்கு ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் விஜயகுருசாமி தலைமை வகித்தார். மோட்டார் வாகன ஆய்வாளர் மணிவண்ணன் முன்னிலை வகித்தார்.
மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடந்து விழிப்புணர்வு ஊர்வலத்தை பங்களாமேட்டில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் துவக்கி வைத்தார். கோட்ட பொறியாளர்கள் வரலட்சுமி, குமணன், சி.இ.ஓ., நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பள்ளி மாணவர்கள் பங்கேற்ற ஊர்வலம் நேருசிலை வரை சென்று பங்க ளாமேடு திரும்பியது.

