/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஊதிய உயர்வு குழு அமைக்காததால் ரேஷன் பணியாளர்கள் அதிருப்தி
/
ஊதிய உயர்வு குழு அமைக்காததால் ரேஷன் பணியாளர்கள் அதிருப்தி
ஊதிய உயர்வு குழு அமைக்காததால் ரேஷன் பணியாளர்கள் அதிருப்தி
ஊதிய உயர்வு குழு அமைக்காததால் ரேஷன் பணியாளர்கள் அதிருப்தி
ADDED : டிச 23, 2025 04:25 AM
தேனி: தமிழக அரசு ஊதிய உயர்வு குழு அமைக்காததால் ரேஷன்கடை பணியாளர்கள் அரசு மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. ஊதிய உயர்வு நிர்ணயம் செய்ய அரசு அதிகாரிகளை உள்ளடக்கிய குழு அமைக்கப்படும். அந்த குழு பல்வேறு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர், பணியாளர்களிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி ஊதிய உயர்வை முடிவு செய்து அரசுக்கு பரிந்துரை செய்வார்கள். அதன் அடிப்படையில் அரசு ஊதிய உயர்வு அறிவிக்கும்.
அதன்படி 2021 பிப்., ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. தற்போது 2026 பிப்.,ல் அறிவிக்க வேண்டும். ஆனால், அதற்கான குழுவை இதுவரை அரசு அறிவிக்கவில்லை. குழு அமைந்தாலும் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி முடிக்க 3,4 மாதங்கள் ஆகும். அதற்குள் தேர்தல் அறிவிப்பு வந்துவிடும் இதனால் தேர்தலுக்கு முன் ஊதிய உயர்விற்கு வாய்ப்பில்லாமல் போகும் என அரசு மீது அதிருப்தியில் ரேஷன்கடை பணியாளர்கள் புலம்பி வருகின்றனர்.

