ADDED : டிச 23, 2025 06:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் தெற்கு அக்ரஹாரம் டிரயம்ப் நடுநிலைப் பள்ளியில் கணிதமேதை ராமானுஜர் பிறந்தநாள் விழா நடந்தது. தலைமையாசிரியர் ராம் சங்கர் தலைமை வகித்தார். பள்ளிக்குழு உறுப்பினர் கணேஷ் முன்னிலை வகித்தார்.
மாணவ, மாணவிகளுக்கு கணிதம் தொடர்பான வினாடி வினா போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியை ஆசிரியைகள் ராஜலட்சுமி, மணிமேகலை ஒருங்கிணைந்தனர். ஆசிரியை பத்மாவதி நன்றி கூறினார்.

