/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இடிந்து விழும் அரசு தொகுப்பு வீடுகள் புதிய வீடுகள் கட்டி தர கோரி பொதுமக்கள் மனு
/
இடிந்து விழும் அரசு தொகுப்பு வீடுகள் புதிய வீடுகள் கட்டி தர கோரி பொதுமக்கள் மனு
இடிந்து விழும் அரசு தொகுப்பு வீடுகள் புதிய வீடுகள் கட்டி தர கோரி பொதுமக்கள் மனு
இடிந்து விழும் அரசு தொகுப்பு வீடுகள் புதிய வீடுகள் கட்டி தர கோரி பொதுமக்கள் மனு
ADDED : டிச 23, 2025 06:33 AM

தேனி: ஆண்டிபட்டி அருகே 30 ஆண்டுகளுக்கு முன் அரசு கட்டி கொடுத்த வீடுகள் இடிந்து விழுவதாகவும், புதிதாக வீடுகள் கட்டி வழங்க கோரி மல்லையகவுண்டன்பட்டிபொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ., ராஜகுமார் முன்னிலை வகித்தார். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கவிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 331 மனுக்கள் வழங்கினர். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் சலவை பெட்டிகள், தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
ஆண்பட்டி தாலுகா புள்ளிமான்கோம்பை மல்லையகவுண்டன்பட்டி ஆதிதிராவிடர் காலனி பாண்டியராஜன், பால்ராஜ், சுரேஷ் வழங்கிய மனுவில், '30 ஆண்டுகளுக்கு முன் மக்களுக்கு அரசு சார்பில் வீடுகள் கட்டி தரப்பட்டது. அந்த வீடுகள் தற்போது சேதமடைந்து ஆங்காங்கே இடிந்து விழுகிறது.
அந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகளை கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்,'என கோரினர்.
பெரியகுளம், சில்வார்பட்டி ஊராட்சி தர்மலிங்கபுரம் பொதுமக்கள் சார்பில் தெய்வேந்திரன் வழங்கிய மனுவில், 'கிராமத்தில் உள்ள பொது மயானத்தை சிலர் ஆக்கிரமித்து குடிசைகள் அமைத் துள்ளனர்.
மயான ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும்,' என்றனர்.
சீர்மரபினர் நலச்சங்க மாநில நிர்வாகி கவுதம் வழங்கிய மனுவில், 'மது குடிக்கு உரிமம் இல்லாதவர்களுக்கு மது விற்க கூடாது என சட்டம் உள்ளது. இதனை அமல்படுத்த வேண்டும்,' என்றிருந்தது.

