/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சின்னம் வரைய அனுமதி; அரசியல் கட்சிகள் குழப்பம்
/
சின்னம் வரைய அனுமதி; அரசியல் கட்சிகள் குழப்பம்
ADDED : மார் 19, 2024 05:45 AM
கம்பம், : ஊராட்சிகளில் சின்னங்கள் வரைய யாரிடம் அனுமதி பெற வேண்டும் என்பதில் அரசியல் கட்சி நிர்வாகிகளுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் பணியில் அரசியல் கட்சிகள் களம் இறங்கியுள்ளன. தேர்தல் பரப்புரையில் சுவர்களில் சின்னங்கள் வரைவது பிரதான பணியாகும். பேரூராட்சிகள், நகராட்சிகளில் சின்னங்கள் வரைய அனுமதி இல்லை. கிராமங்களில் மட்டும் வரைந்து கொள்ளலாம். ஒட்டுச்சாவடி, வழிபாட்டு தலங்களுக்கு 200 மீட்டர் அப்பால் வரையலாம். ஒரு வீட்டின் சுவரில் சின்னம் வரைய வேண்டும் என்றால், வீட்டின் உரிமையாளரிடம் அனுமதி கடிதம் பெற வேண்டும்.
அதை வைத்து மாவட்ட தேர்தல் அலுவலருக்கு அனுமதி - கேட்க வேண்டும் என்று கம்பம் சட்டசபை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தாட்சாயினி கூறுகிறார்.
சம்பந்தப்பட்ட இடத்தை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, திருப்தி ஏற்படும் பட்சத்தில் அனுமதி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
ஆனால் தற்போது தேர்தல் கமிஷனின் சுவேதா செயலியில் விண்ணப்பத்தை அப்லோடு செய்து, அனுமதி பெற வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
ஆனால் இதுவரை சின்னங்கள் வரைவது தொடர்பாக அனுமதி கேட்டு விண்ணப்பங்கள் ஏதும் வரவில்லை என்றனர்.

