/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஏலக்காய் ஏலம் ஆன்லைனில் நடத்த அனுமதி மார்ச் 5 ல் புத்தடி, போடியில் நடக்கிறது
/
ஏலக்காய் ஏலம் ஆன்லைனில் நடத்த அனுமதி மார்ச் 5 ல் புத்தடி, போடியில் நடக்கிறது
ஏலக்காய் ஏலம் ஆன்லைனில் நடத்த அனுமதி மார்ச் 5 ல் புத்தடி, போடியில் நடக்கிறது
ஏலக்காய் ஏலம் ஆன்லைனில் நடத்த அனுமதி மார்ச் 5 ல் புத்தடி, போடியில் நடக்கிறது
ADDED : மார் 02, 2024 01:45 AM
கம்பம்,:ஸ்பைசஸ் வாரியம் அனுமதியுடன் ஆன்லைனில் ஏலக்காய் ஏலம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இ - ஆக் ஷன் மையங்களில் மட்டும் நடத்த நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஏலக்காய் சாகுபடி கேரளா, தமிழகம், கர்நாடகா மாநிலங்களில் மட்டும் அதிகம் நடக்கிறது. இந்திய உற்பத்தியில் 80 சதவீதத்தை கேரளா பகிர்ந்து கொள்கிறது. இடுக்கி மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடியாகிறது. ஏலக்காய் ஸ்பைசஸ் வாரியத்தின் லைசென்ஸ் பெற்ற ஆக் ஷன் கம்பெனிகளில் பதிவு செய்து விற்பனை செய்ய வேண்டும். இதற்கென போடி, புத்தடியில் இ ஆக் ஷன் மையங்கள் உள்ளன. இங்கு வாரத்தில் ஆறு நாட்கள் காலை, மாலையில் ஏலம் நடத்தும். தற்போது 14 நிறுவனங்கள் ஏலம் நடத்துகின்றன. கடந்தாண்டு சில நிறுவனங்கள் ஆன்லனில் ஏலம் நடத்தின. இவற்றிற்கு ஸ்பைசஸ் வாரியம் தடை விதித்தது.
இந்நிலையில் தற்போது ஆன்லைன் ஏலம் நடத்திட ஸ்பைசஸ் வாரியம் அனுமதித்துள்ளது. ஏற்கனவே ஆக் ஷன் நடத்தி வரும் நிறுவனங்கள் எந்த அடிப்படையில் நடத்துகிறதோ, அதே அடிப்படையில் தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது வங்கி கியாரண்டி, விவசாயிகளுக்கு குறிப்பிட்ட நாளில் பணம் பட்டுவாடா போன்ற நிபந்தனைகள் முக்கியமானதாகும். குறிப்பாக ஆன்லைன் ஆக் ஷன்கள் ஸ்பைசஸ் வாரியத்தின் இ ஆக் ஷன் மையங்கள் உள்ள புத்தடி, போடியில் மட்டுமே நடத்த நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மார்ச் 5 ல் முதல் ஆன்லைன் ஏலம் புத்தடி, போடியில் நடக்கிறது. இதே போன்று மேலும் சில நிறுவனங்கள் ஆன்லைன் ஏலம் நடத்த ஸ்பைசஸ் வாரியத்திடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளன.

