/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பென்னிகுவிக் 113வது நினைவு தினம் நாளை மணிமண்டபத்தில் அனுசரிப்பு
/
பென்னிகுவிக் 113வது நினைவு தினம் நாளை மணிமண்டபத்தில் அனுசரிப்பு
பென்னிகுவிக் 113வது நினைவு தினம் நாளை மணிமண்டபத்தில் அனுசரிப்பு
பென்னிகுவிக் 113வது நினைவு தினம் நாளை மணிமண்டபத்தில் அனுசரிப்பு
ADDED : மார் 08, 2024 01:26 AM

கூடலுார்: முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னிகுவிக்கின் 113 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நாளை (மார்ச் 9) லோயர்கேம்ப் மணிமண்டபத்தில் விவசாயிகள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்த உள்ளனர்.
தமிழகத்திற்கு நீர் ஆதாரமாக உள்ள முல்லைப் பெரியாறு அணையை ஆங்கிலேய பொறியாளர் பென்னிகுவிக் பல்வேறு இடையூறுக்கு இடையே 1895ல் கட்டி முடித்தார்.
அணையில் உள்ள நீரை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன்படுத்தி வருகின்றனர். வறட்சியின் பிடியிலிருந்து தமிழகத்தை அணையைக் கட்டிக் காப்பாற்றிய இவரை தமிழக மக்கள் கடவுளாக நினைத்து வணங்கி வருகின்றனர்.
இவர் 1911 மார்ச் 9ல் இறந்தார். இவரது கல்லறை இங்கிலாந்தில் கேம்பர்லி நகரில் உள்ள பழமையான செயின்ட் பீட்டர்ஸ் சர்ச்சில் உள்ளது.
இவரின் 113 வது நினைவு தினம் நாளை (மார்ச் 9) அனுசரிக்கப்பட உள்ள நிலையில் லோயர்கேம்ப் மணிமண்டபத்தில் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி விவசாயிகள் அஞ்சலி செலுத்த உள்ளனர். அரசு சார்பில் நீர்வளத்துறை அதிகாரிகள் மாலை அணிவிக்க உள்ளனர்.

