ADDED : அக் 11, 2024 05:41 AM
தேனி: மாவட்டத்தில் 50 ஆண்டுகளுக்கு மேல் பழமையான, இடியும் நிலையிலான கட்டடங்களை கணக்கிட உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்.,15க்கு மேல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் பற்றி அரசு சார்பில் அனைத்து துறை அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் தாலுகா வாரியாக குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேலான கட்டடங்கள், பழமையான வீடுகள், இடியும் தருவாயில் உள்ள வீடுகள் உள்ளிட்டவற்றை கணக்கிட்டு அறிக்கை தாக்கல் தாக்கல் செய்ய ஊராட்சிகள், பேரூராட்சி, நகராட்சி அமைப்புகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

