/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பம் அருகே பாதை பிரச்னையில் தாய், மகளுக்கு அரிவாள் வெட்டு
/
கம்பம் அருகே பாதை பிரச்னையில் தாய், மகளுக்கு அரிவாள் வெட்டு
கம்பம் அருகே பாதை பிரச்னையில் தாய், மகளுக்கு அரிவாள் வெட்டு
கம்பம் அருகே பாதை பிரச்னையில் தாய், மகளுக்கு அரிவாள் வெட்டு
ADDED : ஜூலை 31, 2025 03:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம் : ராயப்பன்பட்டி தென்னந்தோப்பில் தென்னங் கீற்று பிரிக்கும் வேலையை சுருளிப்பட்டி செல்வம் மனைவி ஜெயமணி 60, அவரது மகள் மதனப்ரியா 40 செய்து வருகின்றனர். இவர்கள் வேலை பார்க்கும் தோப்பிற்கு பக்கத்தில் உள்ள தென்னந்தோப்பின் வழியாக செல்ல வேண்டும். அந்த தோப்பில் காவலாளியாக ராயப்பன்பட்டி முருகன் 65,வேலை செய்கிறார். தினமும் வேலைக்கு வரும் ஜெயமணியிடம், 'எங்கள் தோப்பில் உள்ள பாதை வழியாக வரக்கூடாது', என்று முருகன் தகராறு செய்வது வழக்கம்.
நேற்று அதே போல ஜெயமணியும், அவரது மகளும் வேலைக்கு வந்த போது, முருகன் சத்தம் போட்டுள்ளார். இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது முருகன் அரிவாளால் ஜெயமணியின் பின் கழுத்தில் வெட்டியுள்ளார்.
தடுக்க முயன்ற மதனப்ரியா கைகளில் வெட்டிவிட்டு தப்பி ஓடினார். அங்கிருந்தவர்கள் இருவரையும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.