/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழா துவக்கம் பக்தர்கள் வசதிக்காக 60 சிறப்பு பஸ்கள் இயக்கம்

ADDED : மார் 10, 2024 07:07 AM

தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழா துவங்கியது. வெளியூர் பக்தர்கள் வசதிக்காக 60 சிறப்பு பஸ்கள் இயக்கப்படகிறது.
தேவதானப்பட்டிலிருந்து 3 கி.மீ., தூரம் மஞ்சளாற்றின் கரையோரம் ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் உள்ளது. இங்கு அம்மனுக்கு விக்ரஹம் கிடையாது. மூடப்பட்ட கதவிற்கு மூன்று கால பூஜை நடக்கிறது. பானையில் நிரம்பி வழியும் நெய்யினை எறும்புகள் நெருங்குவதில்லை.
இரவு, பகலாக அணையாத நெய் விளக்கு எரிகின்றது. குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் அம்மனை குல தெய்வமாக நினைத்து வணங்கி வருகின்றனர்.
இக் கோயிலின் மாசி மகா சிவராத்திரி திருவிழா நேற்று முன்தினம் (மார்ச் 8) துவங்கியது. நேற்று
இரண்டாம் நாள் திருவிழா களைகட்டியது. பக்தர்கள் கரும்பு தொட்டிலில் குழந்தையை வைத்து நேர்த்திக்கடன் செலுத்துவது, மா விளக்கு, பொங்கல் வைத்த்தல், அக்னிசட்டி எடுத்தல் ஆகிய நேர்த்திக்கடன் அம்மனை வழிபடுகின்றனர். நேற்று முன்தினம் மார்ச் 8 முதல் மார்ச் 15 வரை 8 நாட்கள் திருவிழா நடக்கிறது.
பஸ் வசதி: திருவிழா காலங்களில் பக்தர்கள் வசதிக்காக பெரியகுளம், ஆண்டிபட்டி வத்தலகுண்டு பகுதியிலிருந்து 60 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. தற்காலிக பஸ் டெப்போ கோயில் அருகே அமைக்கப்பட்டுள்ளது. பஸ்கள் தேவதானப்பட்டி அரிசி கடை வழியாக கோயிலுக்கு சென்று, அட்டணம்பட்டி பிரிவு வழியாக வெளியேறுகிறது. 30 தூய்மை பணியாளர்கள், 4 மேற்பார்வையாளர்கள் குழு அமைத்து சுழற்சி முறையில் தூய்மை பணியை மேற்கொண்டு வருகின்றனர். மஞ்சுளாற்றில் பக்தர்கள் குளிக்க மஞ்சளாறு அணையிலிருந்து வினாடிக்கு 40 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 60 சி.சி.டி.வி., கேமரா கோயில் அருகே புறக்காவல் நிலையம் அமைத்து சுழற்சி முறையில் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.