/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வெயில் அதிகரிப்பால் பால் உற்பத்தி குறைவு
/
வெயில் அதிகரிப்பால் பால் உற்பத்தி குறைவு
ADDED : மார் 10, 2024 04:03 AM
கம்பம், : வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பால் உற்பத்தி குறைந்து வருகிறது.
சுற்றுப்புறச்சூழல் மாசு, சீதோஷ்ணநிலையில் மாற்றம், பருவம் தவறி பெய்யும் மழை, எதிர்பாரத அளவு கூடுதல் மழை, அதிக வெப்பம் ஆகியவற்றால் இயல்பு அளவை விட தற்போது வெயில் தகிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. இந்த அதிக பட்ச வெப்பம் வீசுவதால் மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் பல்வேறு நோய்கள் வரும். குறிப்பாக மனிதர்களுக்கு அம்மை, வயிற்றுப் போக்கு, மஞ்சள் காமாலை போன்ற நோய் பாதிப்பு ஏற்படும். பசுக்கள் தீவனம் உண்ணாது. மாவு கலந்த தண்ணீர் குடிக்காது. வெறும் தண்ணீர் மட்டுமே அதிகம் குடிக்கும். மாலையில் தான் தீவனம் உண்ணும். மாவு, புண்ணாக்கு தண்ணீர் குடிக்கும். இதனால் பால் உற்பத்தி குறையும்.
இது தொடர்பாக கால்நடை பராமரிப்பு துறையினர் கூறுகையில், கோடை காலத்தில் பால் உற்பத்தி குறைவது வாடிக்கையானது. இந்தாண்டு வெயிலின் தாக்கம் கூடுதலாக இருப்பதால் உற்பத்தி குறைவு சற்று அதிகமாகவே இருக்கும். இது தவிர்க்க முடியாதது என்கின்றனர்.

