/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மூழ்கும் பா.ஜ., கப்பலில் தேர்தலுக்கு பின் அ.தி.மு.க.,தொற்றிக் கொள்ளும் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேச்சு

ADDED : ஏப் 02, 2024 12:03 AM
தேனி : ' மூழ்கும் பா.ஜ., கப்பலில் அ.தி.மு.க., தேர்தலுக்கு பின் தொற்றி கொள்ள வாய்ப்பு உண்டு,' என, தி.மு.க.,வேட்பாளர் தங்கதமிழ்செல்வனை ஆதரித்து அல்லிநகரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசினார்.
அவர் பேசியதாவது: விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட மூன்று சட்டங்களை 383 நாட்கள் போராட்டத்திற்கு பின் பிரதமர் மோடியை வாபஸ் வாங்க வைத்தவர்கள் விவசாயிகள். இந்த குடியுரிமை சட்டம் லோக்சபாவில் கொண்டு வந்த போது இண்டியா கூட்டணி எம்.பி.,கள், தி.மு.க., எம்.பி., கள் ஒன்றிணைந்து அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி.,க்களிடம் ஆதரவு கோரினர். பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க., அதற்கு செவிசாய்க்காமல் ஆதரவு அளித்தது.
அதனால் குடியுரிமை சட்டம் அமலானது. தற்போது குடியுரிமை சட்டத்தை நாங்கள் எதிர்கிறோம் என கூறுகிறார் பழனிசாமி. பா.ஜ., என்ற மூழ்கும் கப்பலில் தற்போது ஏறாத பழனிச்சாமி, தேர்தலுக்கு பின் தொற்றிக் கொள்ள வாய்ப்பு உண்டு என பேசினார்.
எம்.எல்.ஏ., சரவணக்குமார், சி.பி.எம்., மாவட்ட செயலாளர் அண்ணாமலை, முன்னாள் மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்பட பலர் பங்கேற்றனர். வேட்பாளர் தங்க தமிழ் செல்வன் பிரசாரத்தில் இருந்ததால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.