/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நெடுஞ்சாலை ஓரத்தில் குப்பை கொட்டுவது- அதிகரிப்பு; கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயக்கம்
/
நெடுஞ்சாலை ஓரத்தில் குப்பை கொட்டுவது- அதிகரிப்பு; கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயக்கம்
நெடுஞ்சாலை ஓரத்தில் குப்பை கொட்டுவது- அதிகரிப்பு; கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயக்கம்
நெடுஞ்சாலை ஓரத்தில் குப்பை கொட்டுவது- அதிகரிப்பு; கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயக்கம்
ADDED : அக் 10, 2024 05:03 AM
கூடலுார், : அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் காட்டுவதால் நெடுஞ்சாலை ஓரங்களில் குப்பை கொட்டுவது நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் கூடலுார், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், வீரபாண்டி பகுதிகளில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
புறவழிச்சாலை பயன்பாட்டுக்கு வந்த பின் நெடுஞ்சாலை ஓரங்களில் குப்பை கொட்டுவதும் அதிகரித்துள்ளது.
கூடலுார், கம்பம், சின்னமனூர் நகராட்சிகளில் சேகரமாகும் குப்பை அதிகமாக நெடுஞ்சாலை ஓரங்களில் கொட்டப்பட்டு வருகிறது.
அதே போல் தேனி-பெரியகுளம் ரோடு சருத்துப்பட்டி, நான்கு வழிச்சாலை சந்திப்பு, பெரியகுளம் -வடுகபட்டி ரோடு பகுதியில் ரோட்டின் ஓரங்களில் குப்பை கொட்டுவது அதிகரித்து வருகிறது. வடுகபட்டி ரோட்டில் அருகில் உள்ள தாமரைகுளம், தென்கரை பேரூராட்சி பணியாளர்கள் குப்பையை கொட்டுகின்றனர். இதனால் சுகாதாரக் கேடு அதிகம் ஏற்பட்டது.
இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறையினருக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுப்பதில் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர்.
நீண்ட தொலைவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் தேனி மாவட்டத்திற்குள் வந்தால் ரோட்டோர கழிவுகளை கண்டு முகம் சுழித்து செல்கின்றனர்.
தமிழக - கேரள எல்லையை இணைக்கும் கூடலுார் புறவழி சாலையில் அதிகமாக குப்பை கொட்டப்படுகிறது.
இதை தடுக்க முறையான நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை. இதனால் தொடர்ந்து குப்பை கொட்டுவது அதிகரித்து வருகிறது.
தமிழக கேரள எல்லையை இணைக்கும் முக்கிய பகுதியான கூடலுார் நகராட்சி ஒன்றாகும்.
கேரளாவில் இருந்து கொண்டு வரப்படும் கழிவுகள் மற்றும் குப்பை இப்பகுதியில் கொட்டுவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

