/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்டத்தில் கடந்த ஆண்டு மாம்பழம் ஏற்றுமதி ரூ.600 கோடி! நவீன தொழில் நுட்பங்களை பின்பற்ற அறிவுருத்தல்

ADDED : மார் 12, 2024 06:14 AM
கம்பம் : தமிழகத்தில் 2022-2023 ல் ரூ 600 கோடி மதிப்புள்ள 66 ஆயிரம் மெ. டன் மாம்பழங்களை ஏற்றுமதி செய்துள்ளதாகவும், வரும் காலங்களிலும் ஏற்றுமதி மேலும் வாய்ப்பு அதிகரிக்கும் என தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் பெரியகுளம், போடி, ஆண்டிபட்டி, கம்பம் உள்ளிட்ட பகுதிகளிலும் மா சாகுபடி செய்யப்படுகிறது. கிரேப்ஸ், கல்லாமை, செந்தூரம், அல்போன்சா, மல்கோவா உள்ளிட்ட பல ரகங்கள் சாகுபடியாகிறது. இந்தாண்டு சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக மரங்களில் பூ பூப்பது தாமதமாகி வருகிறது. இதனால் மகசூல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே கோவை வேளாண் பல்கலைக்கழக வேளாண் வணிக துறையின் தகவலின்படி தேனி தோட்டக் கலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது :
தேனி மாவட்டத்தில் சாகுபடியாகும் மாம்பழங்களுக்கு நல்ல மார்க்கெட் உள்ளது. கடந்த 2022-2023 ம் ஆண்டில் ரூ.600 கோடி மதிப்புள்ள 66 ஆயிரம் மெ.டன் மாம்பழங்கள் மற்றும் மாங்காய் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவிற்கு மாம்பழ ஏற்றுமதியில் 19 சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இருந்து பங்கனப்பள்ளி, அல்போன்ஸா ,தோட்டா புரி, இமாம் சந் உள்ளிட்ட 21 ரகங்கள் ஏற்றுமதியாகிறது. தமிழகத்தில் 1.15 லட்சம் எக்டேரில் 92 லட்சம் டன் மாங்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. எக்டேருக்கு 6.34 மெ.டன் மகசூல் கிடைக்கிறது.
எனவே விவசாயிகள் மா சாகுபடியில் நவீன தொழில் நுட்பங்களையும், ஏற்றுமதி ரகங்களையும் சாகுபடி செய்ய முன்வர வேண்டும். பெரியகுளம் தோட்டக் கலை ஆராய்ச்சி நிலையம் நவீன தொழில் நுட்பங்கள் குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளது. மா விவசாயிகள் தோட்டக்கலைத் துறையினரை அந்தந்த வட்டார உதவி இயக்குனர்களை சந்தித்து ஆலோசனை பெறலாம் என்றனர்.