/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஊராட்சிகளுக்கு நிர்ணயித்த அளவு குடிநீர் வழங்க வேண்டும் ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தல்

ADDED : மார் 08, 2024 01:29 AM

பெரியகுளம்: கோடையில் ஊராட்சிகளில் நிலவும் குடிநீர் பிரச்னையை சமாளிக்க குடிநீர் வடிகால் வாரியம் ஊராட்சிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவு குடிநீர் வழங்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகம் வலியுறுத்தியது.
பெரியகுளம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் கோடை காலத்தில் குடிநீர் பிரச்னையை சமாளிக்க ஆய்வு கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் சரவணக்குமார் எம்.எல்.ஏ., தலைமையில் நடந்தது. பி.டி.ஓ.,க்கள் ஜெகதீஷ் சந்திர போஸ், சேகரன் முன்னிலை வகித்தனர். குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் மனோகரன், உதவி பொறியாளர் செல்வி, ஊராட்சி தலைவர்கள், செயலர்கள் பங்கேற்றனர்.
17 ஊராட்சிகளுக்கு ஊராட்சிகளில் கிணறுகள் அமைத்து மின் மோட்டார் குழாய் வழியாக குடிநீர் சப்ளையும், சோத்துப்பாறை கூட்டுக் குடிநீர் திட்டம், வடுகபட்டி கூட்டுக்குடிநீர் திட்டம், லட்சுமிபுரம் கூட்டு குடிநீர் திட்டம் வழியாக ஊராட்சிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
இதில் மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம், அழகர்நாயக்கன்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, ஜி.கல்லுப்பட்டி, சருத்துப்பட்டி, ஜல்லிபட்டி பகுதிகளில் நிர்ணயிக்கப்பட்ட கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து குடிநீர் வினியோகம் வழங்க வேண்டும் எனவும், கீழ வடகரையில் சோத்துப்பாறை கூட்டு குடிநீர் திட்டத்தை புதிதாக துவங்கவேண்டும் என ஊராட்சி தலைவர், செயலர்கள் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.