/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஜனவரி, பிப்ரவரியில் புத்தக திருவிழா நடத்த எதிர்பார்ப்பு
/
ஜனவரி, பிப்ரவரியில் புத்தக திருவிழா நடத்த எதிர்பார்ப்பு
ஜனவரி, பிப்ரவரியில் புத்தக திருவிழா நடத்த எதிர்பார்ப்பு
ஜனவரி, பிப்ரவரியில் புத்தக திருவிழா நடத்த எதிர்பார்ப்பு
ADDED : நவ 01, 2024 07:20 AM
தேனி: 'மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்படும் புத்தகத் திருவிழா இந்த முறையாவது ஜனவரி அல்லது பிப்ரவரில் நடக்குமா என ஆசிரியர்கள், பெற்றோர் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் இரு புத்தகத் திருவிழாக்கள் நடத்தப்பட்டு உள்ளன.
இந்த புத்தகத் திருவிழாவிற்கு பொது மக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அதிகம் வருகை தந்து புத்தகங்கள் வாங்குகின்றனர்.
ஆனால், இரு முறையும் அரசு பொதுத் தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவர்கள் வருவதில் சிக்கல் இருந்தது. இரு புத்தகத் திருவிழாவும் மார்சில் நடந்தது.
இதனால் பொதுத் தேர்விற்கு தயாராவதால் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் பங்கேற்கவில்லை. இதனால், 3வது புத்தகத் திருவிழா ஜனவரி அல்லது பிப்ரவரியில் நடத்த வேண்டும் என, பெற்றோர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.