/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பிளஸ் 2 தேர்வுகளில் பங்கேற்ற மாணவர்கள் எண்ணிக்கையில் குளறுபடி
/
பிளஸ் 2 தேர்வுகளில் பங்கேற்ற மாணவர்கள் எண்ணிக்கையில் குளறுபடி
பிளஸ் 2 தேர்வுகளில் பங்கேற்ற மாணவர்கள் எண்ணிக்கையில் குளறுபடி
பிளஸ் 2 தேர்வுகளில் பங்கேற்ற மாணவர்கள் எண்ணிக்கையில் குளறுபடி
ADDED : மார் 07, 2024 06:08 AM
தேனி: மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு தமிழ், ஆங்கிலம் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 1 முதல் துவங்கி நடந்து வருகிறது. பிளஸ் 2ல் பல்வேறு பாடப்பிரிவுகள் இருந்தாலும் அனைத்து மாணவர்களும் தமிழ், ஆங்கில மொழித் தேர்வுகளில் பங்கேற்கின்றனர். இதில் ஆங்கில தேர்வு எழுத மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.
மாவட்டத்தில் மொத்தம் 12,802 பேர் பிளஸ் 2 தேர்வு எழுத உள்ளதாக, பிப்., 29ல் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
தமிழ் தேர்வில் பள்ளி மாணவர்கள் 6106 பேர், மாணவிகள் 6663 பேர் என 12,769 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் ஆங்கில தேர்வில் மாணவர்கள் 6253 பேர், மாணவிகள் 6561 பேர் என 12,814 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது தமிழ் தேர்வை விட ஆங்கிலத்தேர்விற்கு பள்ளி மாணவர்கள் 147 பேர் அதிகமாகவும், மாணவிகள் 102 பேர் குறைவாகவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் மொத்த தமிழ் தேர்வை விட ஆங்கில தேர்விற்கு 45 பேருக்கு கூடுதலாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மார்ச் 4ல் துவங்கிய பிளஸ் 1 தமிழ் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையை விட கூடுதலாக மாணவர்கள் தேர்வு எழுதியதாக பட்டியல் வெளியிடப்பட்டது.
எண்ணிக்கையில் குளறுபடி உள்ளதாக கூறியதை தொடர்ந்து கல்வித்துறையினர் மாற்றினர். பள்ளிகல்வித்துறையினர் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களின் விவரங்களை குளறுபடி இன்றி வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

