/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கிடரி கன்றுகளுக்கு தடுப்பூசி பணி தீவிரம்
/
கிடரி கன்றுகளுக்கு தடுப்பூசி பணி தீவிரம்
ADDED : மார் 01, 2024 12:23 AM
கம்பம் : ஆறு மாதம் முதல் ஒரு வயது வரை உள்ள கிடரி கன்று குட்டிகளுக்கு புருசெல்லா தடுப்பூசி போடும் பணியில் கால்நடை பராமரிப்புத் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கால்நடை பராமரிப்புத் துறை சார்பாக மாடுகளுக்கு தடுப்பூசிகள் போடும் பணி மேற்கொள்வது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் செப்., காணை நோய் தடுப்பூசி, கோழிகளுக்கு கோழி கழிசல் தடுப்பூசி திட்டத்தில் தற்போது இரண்டு வார கழிசல் நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே பசு மாடுகள் ஈன்றுள்ள கிடரி கன்று குட்டிகள் ஆறு மாதம் முதல் ஒரு வயது வரையிலான கன்றுகளுக்கு புருசெல்லா என்ற வைரஸ் தாக்கும். இந்த வைரசில் இருந்து பாதுகாக்க தடுப்பூசி போடும் பணி தமிழகம் முழுவதும் துவங்கியுள்ளது.
கால்நடை பராமரிப்பு துறையினர் கூறுகையில், கிடரி கன்று குட்டிகளை புருசெல்லா என்ற வைரஸ் தாக்கும். இந்த கன்று குட்டிகள் வளர்ந்து சினைப் பிடிக்கும் போது வைரஸ் தாக்கிய குறை பிரசவம் ஆகும். அந்த சமயத்தில் இந்த நோய் மனிதர்களுக்கும் பரவும். எனவே அதை தடுக்க 6 மாதம் முதல் ஒரு வயது வரை உள்ள கிடரி கன்று குட்டிகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவுவதால் காய்ச்சல், தலைவலி ,இருமல், நரம்புகளை பாதித்தல், மலட்டுதன்மை ஏற்படுவது என பாதிப்புக்கள் ஏற்படும். எனவே தற்போது பெண் கன்றுகுட்டிகளுக்கு புருசெல்லா தடுப்பூசி போட்டு வருகிறோம் என்றனர்.

