ADDED : நவ 27, 2025 06:06 AM

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் நகர ஓட்டல்கள் சங்கம் சார்பில், முப்பெரும் விழா தனியார் ஓட்டலில் நடந்தது.
இச்சங்கத்தின் 31வது ஆண்டு விழா, புதிய நிர்வாகிகள் தேர்வு, மாவட்டச் செயற்குழு கூட்டம் ஆகிய முப்பெரும் விழாவில் தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க மாநில செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார்.
மாநில துணைத் தலைவர் ராஜ்குமார், ஓட்டல்கள் சங்கத்தின் தேனி மாவட்டச் செயலாளர் பொன்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஓட்டல்களில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஏற்கனவே உள்ள சட்டத்தை அமல்படுத்தவும், உணவு தொழிலுக்கு மின்சார மானியம் வழங்கவும் அரசை வலியுறுத்துவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
விழாவில் புதிய நிர்வாகிகளாக கென்னடி, சரவணன் ஆகியோர் இணைக்கப்பட்டனர்.
விழா ஏற்பாடுகளை ஆண்டிபட்டி நகர ஓட்டல்கள் சங்க தலைவர் பாண்டியன், செயலாளர் சுப்பு, பொருளாளர் கணேசன் ஆகியோர் செய்திருந்தனர். நகர துணை தலைவர் பாலமுருகன் நன்றி தெரிவித்தார்.

