ADDED : டிச 23, 2025 06:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தொகுப்பூதிய அடிப்படையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் 100க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டிசம்பர் 18 முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். செவிலியர்களுக்கு ஆதரவாக அரசு ஊழியர் சங்கத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தாஜுதீன் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் முத்துகுமார், துணைத்தலைவர் ரவிக்குமார், மாவட்ட இணை செயலாளர் விஸ்வன், மருத்துவ துறை ஊழியர் சங்க மாநில செயலாளர் முத்துப்பாண்டி, வருவாய்த்துறை ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் நாகராஜ் பங்கேற்றனர்.

