/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேவதானப்பட்டியில் நல்லாசிரியர் விருது வழங்கும் விழா
/
தேவதானப்பட்டியில் நல்லாசிரியர் விருது வழங்கும் விழா
தேவதானப்பட்டியில் நல்லாசிரியர் விருது வழங்கும் விழா
தேவதானப்பட்டியில் நல்லாசிரியர் விருது வழங்கும் விழா
ADDED : அக் 23, 2024 05:04 AM

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே டி.வாடிப்பட்டி தேவாங்கர் பாலிடெக்னிக் கில், தேனி வைகை அரிமா சங்கம் இணைந்து நல்லாசிரியர் விருது வழங்கும் விழா பாலிடெக்னிக்கில்நடந்தது.
அரசு தொழில்பயிற்சி மைய முதல்வர் சேகரன் தலைமை வகித்தார். தேனி வைகை அரிமா சங்கம் தலைவர் சரவணராஜா, செயலாளர் கண்ணன், பொருளாளர் ஸ்ரீதரன், ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.கல்லூரி தலைவர் டாக்டர் உமையாள், ஆலோசகர் முருகேசன், செயலாளர் காமராஜ் முதல்வர் வேல்விழி வரவேற்றனர். அப்துல் ஜப்பார், ஆடிட்டர் ஜெகதீசன் உட்பட பலர் பங்கேற்றனர். 42 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. துணை முதல்வர் ரதிமாலா நன்றி கூறினார்.-