/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனியில் குப்பை தேக்கம்: சுகாதாரம் மேம்படுத்த நடவடிக்கை தேவை நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் வலியுறுத்தல்
/
தேனியில் குப்பை தேக்கம்: சுகாதாரம் மேம்படுத்த நடவடிக்கை தேவை நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் வலியுறுத்தல்
தேனியில் குப்பை தேக்கம்: சுகாதாரம் மேம்படுத்த நடவடிக்கை தேவை நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் வலியுறுத்தல்
தேனியில் குப்பை தேக்கம்: சுகாதாரம் மேம்படுத்த நடவடிக்கை தேவை நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் வலியுறுத்தல்
ADDED : ஏப் 18, 2025 06:52 AM
தேனி: தேனியில் நகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் குப்பை தேங்குவதால் கவுன்சிலர்கள் ஆலோசித்து நகரின் சுகாதாரம் மேம்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கவுன்சிலர் நாகராஜ் வலியுறுத்தினார்.
தேனி அல்லிநகரம் நகராட்சி கூட்டம் தலைவர் ரேணுப்பிரியா தலைமையில், துணைத் தலைவர் செல்வம் முன்னிலையில் நடந்தது.
நகர் நல அலுவலர் டாக்டர் கவிப்பிரியா, சுகாதார அலுவலர் ஜெயராமன், நகராட்சி பொறியாளர் குணசேகரன், உதவிப் பொறியாளர் முருகன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:காமாட்சி, (அ.தி.மு.க.,): கேந்திரிய வித்யாலயா பள்ளி அல்லிநகரம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் ஆரம்பிக்க உள்ளதாக தகவல் உள்ளது. அங்கு ஏற்கனவே படிக்கும் மாணவர்கள் எங்கு செல்வார்கள். அவர்களுக்கான என்ன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தலைவர்: அவர்கள் அனைவரும் நகராட்சி மாதிரி மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றப்பட்டு கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜெயா, (அ.ம.மு.க.,): சொத்து வரி கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதற்கு நகர்மன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
தலைவர்: அவ்வாறு தெரிவிக்க இயலாது.
நாகராஜ், (காங்,): 2வது வார்டில் குப்பை தேங்கி சுகாதார சீர்கேடு நிலவிய பிரச்னை சீரமைக்கப்பட்டது. நகரில் அனைத்து வார்டுகளில் குப்பை தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை மன்ற உறுப்பினர்கள்பேசி அதற்கான தீர்வு காண வேண்டும்.
தலைவர்: கூடுதல் பணியாளர்கள் நியமிக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
கூட்டத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளியை நகராட்சி தொடக்க பள்ளியில் 3 ஆண்டுகளுக்கு நடத்த இடம் ஒதுக்கீடு, நகராட்சியை 2 வருவாய் கிராமங்களாக பிரிப்பதற்கும், தற்போதுள்ள 140 துாய்மைப் பணியாளர்களுடன் கூடுதலாக 79 பணியாளர்களை தனியார் நிறுவனம் மூலம் பணியமர்த்த ஒப்புதல், பாதாள சாக்கடைத் திட்டத்தை விரிவாக்கப் பகுதிகளுக்கு நடைமுறைப்படுத்த அனுமதி வழங்குதல் உட்பட 70 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

