ADDED : பிப் 28, 2024 04:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி : பெரியகுளம் அருகே பொம்மிநாயக்கன்பட்டி மேற்கு தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சதாம் உசேன்.
ஆட்டோவில் வெற்றிலையினை ஏற்றிக்கொண்டு பெரியகுளம் நோக்கி சென்று கொண்டிருந்தார். மேல்மங்கலம் அருகே செல்லும்போது மேல்மங்கலத்தைச் சேர்ந்த மருதுபாண்டி, ஆட்டோவை வழிமறித்து சதாம்உசேனை இரும்பு வாலியால் அடித்து காயப்படுத்தினார். பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு சதாம் உசேன் அனுப்பி வைக்கப்பட்டார்.போலீசார் மருதுபாண்டியிடம் விசாரிக்கின்றனர்.

