/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பம் அரசு மருத்துவமனையில் குவிந்த குப்பையால் அச்சம்
/
கம்பம் அரசு மருத்துவமனையில் குவிந்த குப்பையால் அச்சம்
கம்பம் அரசு மருத்துவமனையில் குவிந்த குப்பையால் அச்சம்
கம்பம் அரசு மருத்துவமனையில் குவிந்த குப்பையால் அச்சம்
ADDED : டிச 17, 2025 05:51 AM

கம்பம், கம்பம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பிளாஸ்டிக், பாலிதின் பைகள்,மருந்து, மாத்திரை காலி டப்பாக்கள் குப்பை குவிந்துள்ளது. இதனை அகற்றாததால் நோயாளிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
கம்பம் அரசு மருத்துவமனை வளாகத்தில் காலி இடங்கள் உள்ளன. அதில் மரம், செடி கொடிகள் வளர்ந்து புதர் மண்டியுள்ளது. பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. மிக அருகில் டயாலிஸ் பிரிவு, தொற்று நோய் பிரிவு, பெண்கள் தங்கி சிகிச்சை பெறும் பிரிவுகள் உள்ளன.
இதில் மரம் செடி கொடிகளுக்கிடையே மருத்துவமனையில் சேகரமாகும் குப்பை குவித்து வைக்கப்பட்டுள்ளது . பிளாஸ்டிக், பாலிதின் பைகள், மருந்து, மாத்திரை காலி டப்பாக்கள் , பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள் என பல்வேறு குப்பை குவியல் குவியலாக கொட்டி வைக்கப்பட்டுள்ளன. குப்பைகளுக்கு அருகில் ரூ.10 கோடியில் பிரசவ மேம்பாட்டு பிரிவு கட்டடம் திறக்கப்பட உள்ளது.
மருத்துவமனை நிர்வாகம் நோயாளிகளை மட்டும் பார்த்தால் போதாது. வளாகம் தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மரம் செடி கொடிகள் வளர்ந்து பசுமை வளாகமாக இருப்பதில் தவறு இல்லை. ஆனால் புதர் மண்டி இருப்பது நோயாளிகளுக்கள்,, டாக்டர்கள்,பணியாளர்கள் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே குப்பை, புதகர்களை அகற்றிட மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

