/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
18ம் கால்வாயை பராமரிக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
/
18ம் கால்வாயை பராமரிக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
18ம் கால்வாயை பராமரிக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
18ம் கால்வாயை பராமரிக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 07, 2025 03:38 AM
உத்தமபாளையம்: லோயர் கேம்ப்பில் ஆரம்பித்து போடி வரை 18 ம் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் பராமரிப்பு பணிகள் நீண்ட காலமாக செய்யவில்லை. இதனால் கால்வாயில் செடி கொடிகள் வளர்ந்து உருமாறியுள்ளது. எனவே 18 ம் கால்வாயை தூர் வார விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அரசு அதை ஏற்று நிதி ஒதுக்கீடு அனுமதித்துள்ளது.
ஆனால் பணி துவங்கவில்லை. எனவே 18 ம் கால்வாய் பராமரிப்பு பணிகளை உடனே துவங்க வலியுறுத்தி பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று உத்தமபாளையம் பைபாஸ் சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் தலைமை வகித்தார். செயலாளர் சலேத்து, விவசாயிகள் சங்க தலைவர் மனோகரன் உள்ளிட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.