ADDED : டிச 19, 2025 05:45 AM

தேனி: தேனி கோட்ட மின்வாரியம் சார்பில், மின்சிக்கன வார விழா நடந்தது. முன்னதாக தேனி பங்களாமேட்டில் துவங்கிய விழிப்புணர்வு ஊர்வலத்தை மேற்பார்வை பொறியாளர் லட்சுமி துவங்கி வைத்தார்.
ஊர்வலத்தில் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். திருமண மண்டபத்தில் நடந்த மின் சிக்கன வார விழாவில் மின் விபத்துக்கள் நடக்காமல் இருக்க மின்வாரிய நடைமுறைகள் குறித்த ராசிங்காபுரம் துணைமின் நிலைய உதவி செயற்பொறியாளர் பிரபு தலைமையிலான குழுவினர் விழிப்புணர்வு நாடகம் நடத்தினர். நிகழ்வில் காந்திகிராம பல்கலை புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் இணை பேராசிரியர் கிருபாகரன் பேசினார். தேனி சி.இ.ஓ., நாகேந்திரன், செயற்பொறியாளர் (பொது) ரமேஷ்குமார், செயற்பொறியாளர்கள் சண்முகா, பாலபூமி, சந்திரமோகன் ஆகியோர் மின்சார சிக்கனம் குறித்து பேசினர். உதவி செயற்பொறியாளர் முருகேஸ்பதி நிகழ்வை தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை தேனி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் சார்பில் தேனி செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர்கள் செய்திருந்தனர்.

