ADDED : ஜன 16, 2026 05:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடமலைக்குண்டு: கடமலைக்குண்டில் தி.மு.க., சார்பில் மாரத்தான் போட்டி நடந்தது. தேனி தெற்கு மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், பெண்கள் பங்கேற்றனர்.போட்டியில் 13 கி.மீ., தூர இலக்கை 40 நிமிடங்களில் கடந்து நிதிஷ்குமார் முதலிடம் பிடித்தார். கருத்தப்பாண்டி 2ம்
இடம், தினகரன் 3ம் இடம் வென்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ., மகாராஜன், மாநில தீர்மானக்குழு உறுப்பினர் ஜெயக்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செல்வம், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் சேதுராஜா, ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, தங்கப்பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

