/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பிப்.,7ல் மாவட்ட பள்ளி மேலாண்மை குழு மாநாடு
/
பிப்.,7ல் மாவட்ட பள்ளி மேலாண்மை குழு மாநாடு
ADDED : பிப் 05, 2024 12:21 AM
தேனி: அரசுப் பள்ளிகளில் செயல்படும் பள்ளி மேலாண்மை குழுக்களின் ஒருங்கிணைப்பு மாநாடு கொடுவிலார்பட்டி கம்மவார் சங்கம் பொறியியல் கல்லுாரியில் பிப்.,7 ல் நடக்கிறது.
மாவட்டத்தில் அரசு தொடக்கப் பள்ளிகள் 325, நடுநிலைப் பள்ளிகள் 99, உயர்நிலைப் பள்ளிகள் 36, மேல்நிலைப் பள்ளிகள் 70 என மொத்தம் 530 பள்ளிகள் செயல்படுகின்றன. ஒவ்வொரு பள்ளியிலும் மேலாண்மை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் சார்பில் நடத்தப்படும் கூட்டங்களில் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், மாணவர்கள் நலன் உள்ளிட்டவை விவாதிக்கப்படுகிறது.
பள்ளிகளில் செயல்படும் இக்குழுக்களின் செயல்பாடுகள் பற்றி எடுத்துரைக்க மாவட்ட அளவிலான மாநாடு பள்ளிக்கல்வித் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.
இம்மாநாடு கொடுவிலார்பட்டி கம்மவார் சங்கம் பொறியியல் கல்லுாரியில் பிப்.,7 ல் நடக்கிறது.
இம்மாநாட்டிற்கு கலெக்டர் ஷஜீவனா தலைமை வகிக்க உள்ளார்.
மாநாடு நடைபெறும் நாளில் காலை நடைபெறும் அமர்வில் ஆண்டிப்பட்டி, பெரியகுளம், மயிலாடும்பாறை பள்ளி குழுக்களும், மதியம் நடைபெறும் அமர்வில் தேனி, போடி, சின்னமனுார், உத்தமபாளையம், கம்பம் வட்டாரங்களைச் சேர்ந்த பள்ளிகளின் மேலாண்மை குழுக்கள் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டு உள்ளன.

