ADDED : ஜன 23, 2025 04:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி அருகே வினோபாஜி காலனியை சேர்ந்தவர்கள் கபிலன், மதன். இருவரும் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டு உள்ளனர்.
அதே பகுதியை சேர்ந்த சரவணகுமார் 21. கண்டித்துள்ளார். ஆத்திரம் அடைந்த இருவரும் சரவணகுமாரை தகாத வார்த்தையில் பேசி, உடைந்த கண்ணாடி பாட்டிலால் கன்னத்தில் கிழித்து காயம் ஏற்படுத்தி உள்ளனர்.சரவணகுமார் புகாரில் போடி தாலுகா போலீசார் கபிலன், மதன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

