/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெரியகுளம் நகராட்சியில் ரூ.5 கோடியில் வளர்ச்சிப் பணிகள்
/
பெரியகுளம் நகராட்சியில் ரூ.5 கோடியில் வளர்ச்சிப் பணிகள்
பெரியகுளம் நகராட்சியில் ரூ.5 கோடியில் வளர்ச்சிப் பணிகள்
பெரியகுளம் நகராட்சியில் ரூ.5 கோடியில் வளர்ச்சிப் பணிகள்
ADDED : அக் 11, 2024 05:40 AM

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சிப் பணிகள் நடந்துள்ளதாக நகராட்சி தலைவர் சுமிதா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: பெரியகுளத்தில் சின்ராஜ் பூங்கா, கொய்யாத்தோப்பு, காயிதேமில்லத் நகர் பூங்கா, வடக்கு பூந்தோட்ட தெரு பூங்கா, வைத்தியநாதபுரம் பூங்கா ஆகிய பூங்காக்கள் புதுப்பிக்கப்பட்டது.
நகர் பகுதியில் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன், மின்துறை அலுவலகம் நகராட்சி கட்டடத்தில் கொண்டு வரப்பட்டது. மார்க்கெட் ரோடு, தெற்கு தெரு, வி.ஆர்.பி., நாயுடு தெரு, கடைவீதி, வடக்கு ரத வீதி, மேலரதவீதி உள்ளிட்ட பகுதிகளில் தார் ரோடு போடப்பட்டுள்ளது. 5 இடங்களில் சோலார் மினி ஹைமாஸ் விளக்கு, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கொய்யா தோப்பு பகுதியில் விளையாட்டு மைதானம், 3 ரேஷன் கடைகள், 3 அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது.
பேரிஜம் ஏரியில் இருந்து வரும் நீரினை குழாய் வழியாக சோத்துப்பாறை அணை மேற்பகுதி குறுக்கே தடுப்பணை கட்டி புவியீர்ப்பு விசையில் (மின் சாதனங்கள் பயன்பாடு இல்லாமல்) குடிநீர் வினியோகம் செய்ய திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.
மக்கள் தொகைக்கு ஏற்ப 10 வார்டுகளுக்கு ஒரு நகர்புற நல வாழ்வு மையம் கட்டப்பட உள்ளது. முன்னோட்டமாக அரண்மனை தெருவில் கட்டப்பட்டுள்ளது.
50 ஆண்டுகளுக்கு முன்பு பாதாளச்சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டது. மக்கள் தொகைக்கு ஏற்ப அனைத்து வார்டுகளிலும் கழிவுநீர் சீராக செல்வதற்கு இரும்பு குழாய் அமைத்து பணி துவங்க உள்ளது.
தென்கரை மார்க்கெட் பின்புறம் மீன் மார்க்கெட் கட்டுவதற்கு ரூ.1.25 கோடி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. நகராட்சியில் தொடர்ந்து வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது என்றார்.

