நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி,: கலெக்டர் அலுவலகம் முன்பு புரட்சித்தமிழர், தமிழ்புலிகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நிர்வாகிகள் ராமர், சுப்புராஜ் முன்னிலை வகித்தனர். கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மனுவில், ' பூமலைக்குண்டு கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை கிராமத்திற்கு எழுதி தர கூறி மற்றொரு சமூகத்தை சேர்ந்தவர்கள் மிரட்டுகின்றனர். வழங்கப்பட்ட நிலத்தில் அத்துமீறி அமர்ந்துள்ளனர். இதனால் இரு சமூக மோதல் ஏற்படும் நிலையினை சிலர் துண்டி விடுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றிருந்தது.