/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விதைச்சான்று ஒருங்கிணைந்த அலுவலக இடத்தேர்வில் தாமதம்
/
விதைச்சான்று ஒருங்கிணைந்த அலுவலக இடத்தேர்வில் தாமதம்
விதைச்சான்று ஒருங்கிணைந்த அலுவலக இடத்தேர்வில் தாமதம்
விதைச்சான்று ஒருங்கிணைந்த அலுவலக இடத்தேர்வில் தாமதம்
ADDED : டிச 13, 2025 05:37 AM
தேனி: தேனி மாவட்டத்தில் ஒரே இடத்தில் ஆய்வகத்துடன் கூடிய விதை சான்றளிப்பு அலுவலகம் அமைக்க இடம் தேர்வு செய்யாததால் விவசாயிகள் விதை சான்று பெற சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வேளாண் விதை சான்றளிப்பு உதவி இயக்குனர் அலுவலகம் இயங்குகிறது. ஆனால் விதை ஆய்வகம் பெரியகுளம் ரோட்டில் ரத்தினா நகரில் அமைந்துள்ளது.
விவசாயி விதைகளை ஆய்வகத்தில் ஆய்வு செய்ய தேனி ரத்தினம் நகர் சென்று, சான்றிதழ் பெற கலெக்டர் அலுவலகம் வர வேண்டியுள்ளது. நீண்ட துாரம் அமைந்துள்ள இரு அலுவலகங்களுக்கு சென்று வர விவசாயிகளுக்கு காலவிரயம் ஏற்படுகிறது. தேனி விதை சான்றளிப்பு உதவி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஆய்வகத்துடன் கூடிய ஒருங்கிணைந்த விதை சான்றளிப்பு உதவி இயக்குனர் அலுவலகம் கட்டுவதற்கு 40 சென்ட் நிலம் வழங்க கலெக்டருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
கலெக்டர், தாசில்தார், வி.ஏ.ஓ.,க்களுக்கு உத்தரவிட்ட நிலையில் இடம் தேர்வு செய்யும் பணி மெத்தனமாக உள்ளன. இதனால் விவசாயிகளின் சிரமம் தொடர்கிறது. மாவட்ட நிர்வாகம் விரைந்து இடம் தேர்வு செய்து ஒப்படைக்கவும், பதிய கட்டடம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்ய விவசாயிகள் கோரியுள்ளனர்.

