/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வைகை அணை நீரின் தன்மை கெடாமல் பாதுகாக்கணும்: ஒருங்கிணைந்த கண்காணிப்பு அவசியம்
/
வைகை அணை நீரின் தன்மை கெடாமல் பாதுகாக்கணும்: ஒருங்கிணைந்த கண்காணிப்பு அவசியம்
வைகை அணை நீரின் தன்மை கெடாமல் பாதுகாக்கணும்: ஒருங்கிணைந்த கண்காணிப்பு அவசியம்
வைகை அணை நீரின் தன்மை கெடாமல் பாதுகாக்கணும்: ஒருங்கிணைந்த கண்காணிப்பு அவசியம்
ADDED : பிப் 09, 2024 07:10 AM
வைகை அணையில் மீன்கள் பிடிப்பதற்கான ஒப்பந்தம் கடந்த ஆண்டு முதல் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
வைகை அணை மீனவர் கூட்டுறவு சங்கத்தில் பதிவு பெற்ற மீனவர்கள் அணையில் மீன் பிடித்து ஒப்பந்ததாரரிடம் கொடுத்து அதற்கான சம்பளம் பெறுகின்றனர். வைகை அணையில் மீன் பிடி குத்தகை எடுத்துள்ளவர்கள் மீன்கள் வளர்ச்சிக்காக இறந்த நாய், கோழிக்கழிவுகளை கொட்டுவதால் தண்ணீர் மாசுபட்டு துர்நாற்றம் வீசுவதாக அப் பகுதியில் வசிக்கும் சிலர் தேனி கலெக்டரிடம் புகார் அளித்தனர்.
இதனை தொடர்ந்து வைகை அணை நீர்ப்பாசனத்துறை, மீன் வளத்துறை அதிகாரிகள் நீர் தேக்கப் பகுதியில் குத்தகைதாரர்கள் செயல்பாடுகளை கண்காணித்து வருகின்றனர்.
நீரில் கலக்கும் கழிவுகள்
மீன்வளத்துறையினர் கூறியதாவது: வைகை அணையில் மீன் பிடிக்க தனியார் ஏலம் எடுத்துள்ளதால் வெளிநபர்கள் நடமாட்டம் நீர் தேக்கப் பகுதியில் அதிகரித்துள்ளது. மீன்கள் வாங்க வருவோர், மீன்களை சுத்தம் செய்யும் தொழிலாளர்கள், விற்பனையாளர்கள் மீன் கழிவுகளை அங்கேயே விட்டுச் செல்கின்றனர்.
இக் கழிவுகள் அணை நீரில் கலந்து பாதிக்கிறது. இதனால் ஒப்பந்தத்தை ரத்து செய்ய பலர் வலியுறுத்துகின்றனர்.
மீன்பிடி ஒப்பந்ததாரர் மீதுள்ள காழ்ப்புணர்வால் தவறான தகவல்களை பரப்புகின்றனர். நீரின் தன்மை மாறினால் அணையில் மீன்கள் இறந்து மிதக்கும். அவ்வாறான சூழல் இல்லை. இறந்த கோழிகள், நாய் ஆகியவற்றை நீரில் கொட்டினால் தெரிந்துவிடும் என்றனர்.
அடையாள அட்டை வழக்க முடிவு
வைகை அணை நீர் பாசன துறையினர் கூறியதாவது: வைகை அணையில் தினமும் 100 முதல் 500 கிலோ மீன்கள் பிடித்து விற்பனை செய்கின்றனர். இதில் இறந்த மீன்களை மண்ணில் புதைக்க வேண்டும் அவ்வாறு செய்யாமல் நீர்தேக்கத்தில் வீசிச் செல்கின்றனர். மீன்களை சுத்தம் செய்து கழிவுகளையும் அங்கேயே விட்டு செல்கின்றனர்.
இவற்றை தடுக்கும் விதமாக தற்போது நீர்த்தேக்கப் பகுதியில் செக்போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. மீன்களை சுத்தம் செய்வோர் நீர்த்தேக்கப் பகுதிக்கு வெளியே செல்ல வேண்டும். இக் கழிவுகளால் நீரின் தன்மை கெட்டுவிடும்.
இதனை தடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளும் போது மீன்பிடி குத்தகைதாரர்களின் ஆட்கள் அலுவலர்களை மிரட்டும் விதமாக நடந்து கொள்கின்றனர். இதனால் கண்காணிப்புக்குச் செல்லும் அலுவலர்களுக்கு பாதுகாப்பு இல்லை. அணை நீர்த்தேக்க பகுதிக்குச் செல்ல நீர் பாசனத்துறை மூலம் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.
மீன்வளத் துறையினர் பரிந்துரைக்கும் நபர்களுக்கு அணை நீர்த்தகப் பகுதியில் மீன்பிடி தொழிலுக்கு சென்று வர அடையாள அட்டை வழங்கப்படும் என்றனர்.

