/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கல்லூரியில் வகுப்புகள் துவக்க விழா
/
கல்லூரியில் வகுப்புகள் துவக்க விழா
ADDED : ஆக 27, 2025 12:34 AM
ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா, நெறிப்படுத்தும் விழா நடந்தது. கல்லூரி நிர்வாக தலைவர் மோகன் தலைமை வகித்தார். துறைத் தலைவர்கள் பிரசன்னவெங்கடேசன், ரேணுகா, சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் அருள்குமார் வரவேற்றார். சர்வதேச ஊக்கமளிக்கும் பேச்சாளர் டாக்டர் ஜெகன் திறன் மேம்பாட்டின் அவசியம் குறித்தும் பேசினார். முன்னதாக விவசாயிகள், மாணவர்களின் தாத்தா, பாட்டி, பெற்றோர்கள் குத்துவிளக்கு ஏற்றினார்.
முதலாம் ஆண்டு துறைத்தலைவர் முனைவர் பிரமிளா நன்றி கூறினார். ஏற்பாடுகளை மேலாளர் நாகேந்திரன், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் செய்திருந்தனர்.