/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விஷம் குடித்த கல்லுாரி மாணவி பலி
/
விஷம் குடித்த கல்லுாரி மாணவி பலி
ADDED : டிச 23, 2025 06:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டியைச் சேர்ந்தவர் ரஞ்சித் 45, இவரது மகள் சுஷ்மிதா 21, பெரியகுளம் தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். மொபைல் போனில் அதிக நேரம் செலவிடும் பழக்கம் இருந்த அவரை தந்தை கண்டித்துள்ளார்.
இதனால் மன வருத்தம் அடைந்த சுஷ்மிதா டிசம்பர் 12ல், வீட்டில் இருந்த விஷ மருந்தை சாப்பிட்டு யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். இரவில் வேலை முடித்து வந்த தந்தையிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.
உடனே அவரை தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். ரஞ்சித் புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

