/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வேலை வாங்கித் தருவதாக ரூ.8 லட்சம் மோசடி செய்த மூவர் மீது வழக்கு
/
வேலை வாங்கித் தருவதாக ரூ.8 லட்சம் மோசடி செய்த மூவர் மீது வழக்கு
வேலை வாங்கித் தருவதாக ரூ.8 லட்சம் மோசடி செய்த மூவர் மீது வழக்கு
வேலை வாங்கித் தருவதாக ரூ.8 லட்சம் மோசடி செய்த மூவர் மீது வழக்கு
ADDED : நவ 24, 2024 07:16 AM
போடி : போடி நகராட்சி பேட்டை தெருவை சேர்ந்த வங்கி இளநிலை உதவியாளர் ரவிக்குமார் 42. இவரது மனைவி மாரியம்மாள் 37., தம்பி வேல் குமார் 34,மூவரும் சேர்ந்து இரு ஆண்டுகளுக்கு முன், போடி புதுார் நடுத்தெருவை சேர்ந்த கமால் முகமது லக்மன் 30, என்பவருக்கு தனியார் வங்கியில் தற்காலிக பணியாளர் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி உள்ளனர். இதற்காக ரூ.8 லட்சம் கேட்டுள்ளனர். இதனை நம்பி கமால் முகமது லக்மன், ரவிக்குமார், மாரியம்மாள், வேல்குமார் ஆகிய மூவரின் வங்கி கணக்கிலும், நேரடியாகவும் ரூ.8 லட்சம் கொடுத்துள்ளார்.
பணம் பெற்றுக் கொண்டு வங்கி பணி நியமன ஆணையை கொடுத்துள்ளனர். வேலை வாங்கி தராமலும், பணத்தை திரும்ப தராமல் நம்பிக்கை மோசடி செய்ததாக கமால் முகமது லக்மன் புகாரில் போடி டவுன் போலீசார் ரவிக்குமார், மாரியம்மாள் உட்பட மூவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.